:
ஒரு நொடியில்.
****************
காதருகே காற்றின் ஓசை
அசையாதே என்ற நண்பனின்
கண்களில் பயம் தெறித்தது
அச்சத்துடன் அமர்ந்திருந்த
என் மீது விழுந்த நிழல் ஒன்று
வேகமாய் நெருங்கி பின்
சட சட வென விலகி போனது
பறந்து போகும் பருந்தின்
கால்களில் ஒரு நாகம்
நெளிந்துக்கொண்டிருந்தது
படபடப்பு அடங்காது நண்பன்
அதிர்ச்சியில் மீளாது நான்
தூரத்தில் புள்ளியாய்
பருந்தும் பாம்பும்.
கவலையே படாத காடு
ஒரு நொடியில்
மரணம் தொட்டு விட்டு
போய் விட்டது என்றான்
நண்பன்
போகவில்லை
இடம் மாறிவிட்டது
என்றேன் நான்.
(விஞ்ஞானி)
Super
பதிலளிநீக்கு🙏
பதிலளிநீக்குமிக மிகநன்று
பதிலளிநீக்கு(செந்தாமரையின் )கருத்து
பதிலளிநீக்குஒரு திகில் கதை படித்த உணர்வு ஏற்படுகிறது முடிவு நிம்மதியை தருகிறது நன்றி