:

     ராஜா முள்.

************

பாட்டி வைத்த பதியன்களால்

தோட்டத்தில் ஒரு 

ரோஜா காடே 

இருந்தது


பாட்டி இருந்தவரை  அதில்

பறிக்கும் முதல் பூ தாத்தா 

படத்துக்கு


இப்போதும் முதல் பூ

தாத்தாவுக்குதான்

அடுத்ததுதான் 

பாட்டிக்கு.


தாத்தா ரொம்ப 

கோபக்காரராம் 

பாவம் பாட்டி 

என்பாள் அம்மா 

அடிக்கடி.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்