எல்லாமுமானவள்.
**************************
பழுப்பேறிய புகைப்படமாய்
நினைவில் நிழலாடிய
பிறந்து வளர்ந்த ஊரை
நேரில் காணும் வாய்ப்பு
கிடைத்தது
மாற்றங்கள் கண்டிருந்தாலும்
பிறந்த வீடு
குதித்து விளையாடிய திண்ணை
ஓடி ஆடி திரிந்த தெரு
தரையிலமர்ந்து படித்த பள்ளி
தாவி தாவி மணியடித்த கோவில்
மீன் பிடித்த குட்டை
ஊஞ்சலாடிய ஆலமரம்
என்று பார்த்தவை
அனைத்தும் மனதை வருடி
நெகிழ வைத்தன
இவற்றையெல்லாம்
இழந்து விட்டோமே என்று
எப்போதாவது வருந்தியது
உண்டா என்று கேட்ட
நண்பரிடம்
இல்லை வருந்தியதில்லை
அம்மா என் கூடவே இருந்ததால்
எதையும் இழந்த உணர்வு
எனக்கு வந்ததில்லை
என்றேன்.
(விஞ்ஞானி)
நேரில்கானும் வாய்ப்பு தந்த நல்ல நினைவுகள்
பதிலளிநீக்குSuper, excellent
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குஇனிய நினைவுகள் தந்த கவிதை
பதிலளிநீக்கு