கிராம வளர்ச்சி.
***************
புழுதி மணல் வீதி
சிமெண்ட் வீதியாகி
இருந்தது
சேவலுக்கு பதில்
கூரை உச்சியில்
டிஷ் ஆண்டனாக்கள்
வீற்றிருந்து
வாசலுக்கு அருகே
மாடுகள் கட்டியிருந்த
இடத்தை டூவீலர்கள்
ஆக்கிரமித்து இருந்தன
டீக்கடை மஞ்சள் பல்பு
எல்இடி பல்பாக மாறி
ஒளிர
டீ மேடையில் கண்ணாடி
டம்ளர்களும்
சுவரோரம் அலுமினிய
டம்ளர்களும்
கவிழ்த்து
அடுக்கப்பட்ட இருந்தன.
தினமும் வந்து
பார்க்கும் சூரியன்
ஜடப்பொருளுருவாக
வியாபித்திருக்கும்
வளர்ச்சி அல்லாது
வேறு மாற்றத்தை
காண முடியாமல்
ஏமாற்றத்துடன்
திரும்பி போகிறது
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக