செம்மொழி ஆன தமிழ் மொழி.

*********************************


ஆழி கடலுள் மூழ்கி எழுந்து

ஊழி பலவும் கடந்து வந்த 

எம்மொழி என்றும் செம்மொழி

செம்மொழி ஆன தமிழ் மொழி


மண்ணை தோண்டிட வயது கூடி

வயது கூடிட இளைமை கூடும்

எம்மொழி என்றும் செம்மொழி

செம்மொழி ஆன தமிழ் மொழி


சூழும் போரில் வீழ்ந்த போதும்

குருதி சேற்றில் துளிர்த்து எழும்

எம்மொழி என்றும் செம்மொழி

செம்மொழி ஆன தமிழ் மொழி


வடக்கில் முளைத்த மடத்து மொழியை

கருவறை சிறைக்குள் முடங்க வைத்த

எம்மொழி என்றும் செம்மொழி

  செம்மொழி ஆன தமிழ் மொழி


சீண்ட சீண்ட சீற்றம் உற்றிடும்

தீண்ட தீண்ட தீயாய் சுட்டிடும்

எம்மொழி என்றும் செம்மொழி

செம்மொழி ஆன தமிழ் மொழி


வாழ வந்தால் வழியை காட்டும் 

ஆள நினைத்தால் அடித்து விரட்டும்

எம்மொழி என்றும் செம்மொழி 

செம்மொழி ஆன தமிழ் மொழி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்