:
பொய்யழகன்.
************
மௌனம் மௌனம் மௌனம்
நாள் முழுவதும் தொடர்ந்த
தலைவரின் மௌன விரதம்
எதற்கு என்று தெரியாமல்
குடும்பம் திகைத்தது
தொண்டர்கள் குழம்பினர்
ஊடகங்கள் மௌனத்தை
உரக்க ஒலிபரப்பின.
மறுநாள் தலைவர் சொன்னது
அது மக்களின் நன்மைக்காக
எனும் ஒரு பொய்யை.
அவர் சொல்லாத உண்மை
ஒரு நாள் முழுவதும்
பொய் சொல்லாமல் இருக்க
முயற்சித்ததன் பின் விளைவே
இந்த மௌன விரதம் என்பது.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக