:

     வீராப்பு

*********************


பொதுவாக நான் அழுவதில்லை


வலிகளை முக்கலிலும் முனகலிலும்

முடக்கி விட பார்க்கின்றேன்


பிரச்சனைகளை முகச் சுளிப்பில்

முடித்து விட முயலுகின்றேன்


நோய்களை அரற்றலிலும் பிதற்றலிலும்

கடந்துவிட நினைக்கின்றேன்


மரணங்கள் தரும்

அழுகையை கூட

மௌனத்தில் புதைக்கின்றேன்


இயலாமைக்கு முக்காடிட்டு

பொய் வேடம் தரிக்கின்றேன்


கண்ணீரின் சிறகொடித்து

இப்படி 

யாருக்காக நடிக்கின்றேன்.




(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்