:

     மறப்பேனா.

************


கொட்டும் மழையில்

தொப்பலாய் நனைந்து

சொட்ட சொட்ட நிற்கும்

தாத்தாவிடம் துண்டை

நீட்டியபடி பாட்டி கேட்டாள்

கொண்டு போன குடை

எங்கே என்று.


மறப்பேனா

என பெருமையாக 

சுட்டிக்காட்டினார் தாத்தா 

வாசல் ஓரமாய்

சாய்த்து வைத்திருந்த

பிரிக்காத குடையை.


(விஞ்ஞானி)

கருத்துகள்

  1. செந்தாமரையின் கருத்து
    வாய்விட்டு சிரிக்க தோன்றியது, முகவரி மழையே நீயும் முதியவன் தான்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்