சூல்.
*******
வண்ணம் குலுங்கும்
பூக்களுடன் செடியொன்று
வண்ணத்து பூச்சி வர
காத்திருக்க
வண்ண வளைக்கரம் வந்தது
பூக்கள் போனது கூடைக்குள்.
பறிக்காமல் விடப்பட்ட
வனப்பில்லா பூக்களை
செடி ஆதுரமாய் பார்த்தது
வம்சம் தழைக்க அவை
சூலுற்று உதவக்கூடும்
எனற நம்பிக்கையில்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக