ஞாபகம் வருதே.
******************
அழகாக கிழித்து
அழகாக தைத்த
ஓட்டைகளுடன் மிளிரும்
முக்கால் பேண்டுகளுடன்
திரியும் இளசுகளை
காணுகையில்
அந்த கால அம்மாக்கள் தம்
பிள்ளை வளர்ந்திடும் என்று
முழங்காலுக்கும் கீழே
இறக்கி தைத்து வாங்கிய
டவுசரில்
உட்காரும் இடம் தேய்ந்து
ஓட்டையான பின்னரும்
அதை போட்டுக்கொண்டு
ஓடிய பிள்ளைகள்தான்
நினைவுக்கு வருகிறார்கள்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக