ஒரிஜினல் பட்டு.
****************
மரத்திலிருந்து விழுந்து
தனது பட்டு புடவையில்
ஒட்டிக் கொண்ட புழுவை
அருவருப்போடு
தட்டி விட்டபடி புலம்பினாள்
எனக்குன்னு எங்கிருந்துதான்
வந்து சேருதுங்களோ என்று.
அருகில் இருந்த கணவன்
சொன்னான்
இந்த புடவையை
உனக்குன்னு செத்து தந்த
புழுக்களுக்கு இன்றைக்கு
நினைவு நாளோ என்னவோ
அஞ்சலி செலுத்த
வந்திருக்கும்
என்று.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக