ராப்பிச்சை
------------------
இரவானதும் அவன் வருவதும் அவனை பார்த்து குரைக்க
தொடங்கும் நாயின் குரல் அவன் யாசகம் பெற்று தெருவை
கடந்து போகும் வரை தொடர்வதும் தினசரி நிகழ்வு.
அந்த பெண் தன் தாயிடம் அவன் தெரிந்த ஆள்தானே
ஏன் இந்த நாய் இப்படி தினமும் குரைக்குது என்று கேட்டாள்
நாய்களுக்கு சிலரை கண்டால் பிடிக்காது அவர்களை
எங்கு பார்த்தாலும் குரைக்கும் என்று அம்மா சொன்னாள்
மேகத்தின் பின்னாலிருந்து. எட்டி பார்த்த நிலா
எதோ சொல்ல வந்து சொல்லாமல் சென்றது
கிடைத்ததை பகிர்ந்து வழக்கம் போல குளத்தங்கரையில்
அவன் சிரிக்க. அது வாலை ஆட்ட அவர்கள்
நிலாச்சோறு. சாப்பிட்டுக் கொண்டு. இருந்தார்கள்
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக