தன்னிரக்கம்.

*****************


அப்பா கோபத்துக்கு 

பயந்து

அம்மா கோபத்துக்கு 

நயந்து

ஆசிரியர் கோபத்துக்கு 

ஒளிந்து

பகைவர் கோபத்துக்கு 

வெகுண்டு 

மனைவி கோபத்துக்கு 

பணிந்து

குழந்தை கோபத்துக்கு

மகிழ்ந்து 

வாழ தெரிந்த எனக்கு


என் மீதான 

என் கோபத்துக்கு 

என் செய்வது 

என்பது தெரிய

வில்லை.


(விஞ்ஞானி)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்