இல்லையினி இடம்.

**********************


இதயத்திலே இல்லையினி

இடம் - விதியே 

துயரை

வாசலிலே வைத்து விட்டு

போய் விடு


கண்களிலே இல்லையினி

ஈரம் - விதியே 

துன்பத்தை 

புறக்கடையில் போட்டுவிட்டு 

போய் விடு


உடலிலே இல்லையினி

வலிமை - விதியே 

வலியை

வேலியோரம் கொட்டி விட்டு 

போய் விடு


உள்ளத்திலே இல்லையினி

திடம் - விதியே 

இடரை

வீதியிலே வீசி விட்டு

போய் விடு.


உன்னுடனே இல்லையினி

உறவு - விதியே 

என்னை  

தனியே விட்டு விட்டு 

போய் விடு.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்