வயிறளவே ஆகுமாம் உலகு.

 வயிறளவே ஆகுமாம் உலகு.

*******************************


இறந்து கிடப்பது

யானையே ஆயினும்

எறும்புக்கு உணவு 

அதன் வாயளவே


கோடியிலே புரண்டாலும்

குடலளவு மாறாது

தங்க குவளையில் கொடுத்தாலும் 

தொண்டை வரைதான் கொள்ளும்


கிழவி தான் சொன்னாளே

கணக்கில் ஒரு நாள் உணவு 

தவிர்க்கவும் இயலாது 

தாண்டிடவும் முடியாது

என்று.


என்று

எழுதிக் கொண்டிருந்ததை

வாங்கி படித்த அப்பா

அம்மாவிடம் சொன்னார்


பய வயித்த ஒருநாள்

காய போடு

பொயப்ப பாக்க தானா

போயிடுவான் என்று.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்