பெரியவர்கள்.

***************

இம்முறை மாறுதலாய் நம்ம

கிராமத்துக்கு போவோம்

என்று ஆரம்பித்த கணவனை

இடைமறித்த மனைவி 

இல்லை கொடைக்கானல் 

போகிறோம் என்றாள்


பிள்ளைகள் மகிழ்ச்சியை

கண்ணுற்ற அவன் முடிவை

பிள்ளைகள் கையில் விட்டு

விட்டான்


தன் குரலுக்கு வலு சேர்க்க

கொடைக்கானல் சிறப்புகளை

அவ்வப்போது பிள்ளைகள்

காதில் போட்டு வந்தாள்.


குறிப்பிட்ட நாளில் அவர்கள்

கார் கிராமத்தை நோக்கி

பயணித்துக் கொண்டிருந்தது


வழியில் சட்டென்று அவள்

அவனை கேட்டாள்

என்ன சொல்லி பிள்ளைகள்

மனச மாத்துனிங்க என்று


அப்பா எதுவும் சொல்லலை

நீதான் சொன்னாய் என்று 

பிள்ளைகளில் ஒன்று சொல்ல

இன்னொரு பிள்ளை

அப்பா அவங்க அம்மாவை

பார்க்க கிராமம் என்று

சொல்லுறார்

அங்க பாட்டிய தவிர வேற 

எதுவும் இல்லைன்னு நீதான

சொன்ன என்றது.


அவன் கண்களில் துளிர்த்த

அந்த கண்ணீர் துளிக்கு காரணம்

மகனின் பாசமா

அப்பாவின் பெருமிதமா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்