அழகானது
தன் நவீன ஓவியத்திற்கு
சரியான விளக்கம்
சொன்னால் பரிசு தரப்படும்
என்றறிவித்தான் அவன்.
பலரும் பார்த்து தங்கள்
கருத்துக்களை பதிவிட்டு
சென்றனர்
அவர்களில் ஒருவனின்
கையிலிருந்த குழந்தை
ஓவியத்தை பார்த்து
அம்மா என்றது
ஆரவாரத்துடன் குதித்த
ஓவியன் பரிசு குழந்தைக்கு
என்று அறிவித்தான்.
உன் அம்மாவை நினைத்து
வரைந்தாயா என்று பின்னர்
கேட்ட நண்பனிடம்
ஓவியன் சொன்னான்
இல்லை நான் நினைத்தது
வேறு ஆனால்
குழந்தை சொன்னது
அதை விட அழகானது
என்று.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக