ஆகாய மார்க்கம்.


ஆகாய மார்க்கமாக

அரை நூற்றாண்டுக்கு பின்

தான் அவதரித்த புண்ணிய 

பூமியை காணும் ஆவலுடன்

விமானத்து சன்னல் வழியே

பார்த்துக்கொண்டிருந்தான்


அவன் நினைவில் இருந்ததோ

பானைக்குள் பிடித்து வைத்த

தண்ணீர் போலிருந்த நகரம்


இன்று காண்பதோ

போட்டுடைத்த பானை நீர்

நாற்புறமும் பரவுவது போல்

பரந்து விரிந்த மாநகரம்


தான் பிறந்த இடத்தையும்

ஆதி சொந்தங்களையும்

இதில் எப்படி கண்டுபிடிப்பது

என்று திகைத்து போனான்.


சிலிர்ப்போடு விமானத்தை

விட்டு இறங்கி நடக்கும் போது

அவனுக்கு தெரியாது அவன்

 இறங்கி காலை வைத்தது

அவன் பிறந்து வளர்ந்து

ஓடி விளையாடிய 

நகர் புற கிராமமாய்

இருந்த இடம் என்பது.


(விஞ்ஞானி)






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்