காதறுந்த ஊசி

 காதறுந்த ஊசி.

****************


காதறுந்த ஊசிகளை ஒரு சிறு

காகிதத்தில் மடித்து தனது

ஊசி நூல் பெட்டியில் ஓரமாய்

வைக்கும் பாட்டியிடம் பேத்தி


குப்பையில் தூக்கி போடாமல்

ஏனிதை பத்திரப்படுத்துகிறாய்

என்று கேட்டாள்


இது ஒரு பணக்காரரையே

சாமியாரா ஆக்கிடுச்சி தெரியுமா என்று சிரித்தாள்

பாட்டி 


செத்தவனோடு இது கூட 

உடன் வராது என்று சொல்லிதானே சாமியாரா ஆனார் அப்புறம் நீ எதுக்கு 

இத சேமிச்சி வைக்கிற

என்ற பேத்தியின் கேள்விக்கு

பாட்டியின் பதில்


குப்பையில் போட்டா யாராவது

கையில காலுல குத்திக்கலாம் இல்லையா அதான் போடல.


கோணி பைகளுடன் குப்பை

மேடுகளில் சிறார்கள் திரியும்

காட்சி பேத்தியின் மனதில்

வந்து போனது


பாட்டியை பார்த்தாள்

பாட்டி பட்டினத்தாரை விட

ஒரு படி மேல் என்று 

அவளு

க்கு தோன்றியது 


(விஞ்ஞானி)




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்