மரத்துப் போச்சு

 


. மரத்துப் போச்சு 

********************

அந்த பாழ் மண்டபத்தில் பேய் இருப்பதாய் ஊர் நம்பியது


முக்காடிட்ட உருவத்தை 

இரவில் பார்த்தாய் சிலர் சொல்வதுண்டு


பொழுது சாய்ந்த பின் யாரும்

அந்த பக்கம் செல்வதில்லை


முற்றத்தில் தாழ்ந்த குரலில் 

பேசிக் கொண்டிருந்த 

வீட்டு பெண்களிடம் அவன்

காவலுக்காக வயலுக்கு

போவதாய் சொல்லிவிட்டு

கிளம்பினான்


போகும் முன் பானையிலிருந்து 

பணத்தை எடுத்து இடுப்பு

வேட்டியில் சுருட்டி வைத்துக்

கொண்டு போனான்.


போனதும் ஒருத்தி கேட்டாள்

ரவையில காவலுக்கு போற

ஆளுக்கு காசு எதுக்கு என்று


முகத்தில் சலனமின்றி 

அவன் மனைவி சொன்னாள்

போற வழியில பேயை 

பாத்துட்டு

 போவார் என்று.


(விஞ்ஞானி)





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்