எளிதாய் இருந்தது
எளிதாய் இருந்தது
*************************
பள்ளி பாடத்தில் மதிப்பெண்
எடுத்து பாராட்டு பெறுவதை விட
பிள்ளையாரை பற்றி கவிதை
எழுதி பாராட்டு பெறுவது
எளிதாய் இருந்தது
காதல் வந்ததும் நேரில் சொல்லி
ஏமாற்றம் அடைவதை விட
ஏட்டில் கவிதையாய் எழுதி
ஏகாந்தத்தில் மகிழ்ந்திருத்தல்
எளிதாய் இருந்தது
பார வண்டியாய் சுற்றிய போது
இயலாமையை வெளியே
இயம்புதலை காட்டிலும்
எழுத்துக்களாய் கவிதைக்குள்
இறக்கி வைத்தல் எளிதாய்
இருந்தது
நகை முகமும் பகை மனமுமும்
உடையவர் உறவென தந்த
வலிகளை
வாய்விட்டு சொல்வதை
காட்டிலும்
கவிதையாய் வரிகளில்
வடித்தல் எளிதாய் இருந்தது
இந்த முகநூல் யுகத்தில்
நண்பர்களை உறவுகளை
தொடர்பில் வைத்துக் கொள்ள
உரையாடல்களை காட்டிலும்
கவிதைகளை பகிர்தல்
எளிதாய் இருந்தது
இருக்கின்றது
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக