பரமன்
பரமன்
************
நான் பாமரன் என்றேன்
உன் உள்ளே பரமன்
உள்ளான் என்றனர்
உண்மையா என்று
கண்ணாடி
முன் நின்று பார்த்தேன்
தலைக்கு மேல் ஒரு பாம்பு
படமெடுத்து குடை பிடித்து
கொண்டிருந்தது
கழுத்தில் இன்னொன்று
துண்டை போல் சுகமாய்
கிடந்தது
இடுப்பை சுற்றி ஒன்று
வளையம் போட்டது
கையில் ஒன்று இறங்கியது
காலில் ஒன்று ஏறியது
பாம்புகளே யார் நீங்கள்
என்றேன்
உன் பந்தங்கள்தான்
பரமனே என்றன.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக