ஜீவகாருண்யம்
ஜீவகாருண்யம்
****************
ஜீவகாருண்யம் என்பதற்கு
பொருள் கேட்ட மகனுக்கு
அப்பா விளக்கமாக
சொன்னார்
அன்று பாதையில் பாம்பை
பார்த்ததும் அடிக்காமல்
விலகி வந்தோமே
அது நமது ஜீவகாருண்யம்
பாம்பும் நம்மை கடிக்காமல்
ஓடி மறைந்ததே
அது அதன் ஜீவகாருண்யம்
புரிந்ததென தலையாட்டிய
மகன்
எழுதியதை வாங்கி படித்தார்
அப்பா
ஜீவகாருண்யம் என்றால்
பயம்
என்று எழுதியிருந்தான்
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக