சூழலை தாண்டி

 சூழலை தாண்டி

**********************


எதையாவது செய்து தொலை

என்பாள் அம்மா ஆனால்

தொலையாது பொத்தி

வளர்ப்பாள்


எதையாவது செய்து தொலைங்க 

என்பாள் மனைவி ஆனால்

பத்து நிமிடம் தாமதமாக

வந்தால் காரணம் ஆயிரம் கேட்பாள்


எதையாவது செய்து தொலைங்க 

என்று சொல்லும் பிள்ளைகள்

அவர்களின் அம்மா பாட்டி

போலத்தான் என்று எண்ணி 


எதையாவது நினைக்கிறேன்

எதையாவது எழுதுகிறேன்

எதையாவது பதிவிடுகிறேன்

எதையாவது எதிர்பார்க்கிறேன் 


ஒரு சுதந்திர கவிஞன்

பாவனையில்.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்