அம்மா நியாயம்
அம்மா நியாயம்
************"*****
சுட்டப் பழம் கையில்
சுடாத பழம் பையில்
மூக்கும் வாயும் புகையில்
உனக்கு தப்பாம பொறந்தது
நிக்குது பொட்டிக் கடையில்
என்று சொல்லியபடியே
வீட்டிற்குள் நுழைந்தவள்
நீ எட்டடி பாஞ்சப்ப உங்க
அம்மா உன்னை தலையில்
குட்டி வளர்த்திருந்தா
குட்டி இப்ப பதினாறடி பாயுமா
என்று புலம்பியபடியே
அவனை கடந்து போனாள்.
தங்கள் பிள்ளையின் தப்புக்கு
தன் அம்மாவை திட்டும்
தன் மனைவியின்
அம்மா நியாயத்துக்கு பதில்
சொல்ல முடியாமல் தடுத்தது
அவன் இடுப்பில் மறைத்து
வைத்திருந்த சுடாதப்பழம்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக