கடன்காரன்
கடன்காரன்.
**************
இதென்ன
பூஜை அலமாரியில்
தடிமனாய் நோட்டு புத்தகம்
என்று கேட்டவரிடம்
இது வேண்டுதல் குறிப்பேடு
என்று சொன்னவர்
தொடர்ந்து
நான் மற்ற கடன்களை
தீர்க்கலைனாலும்
சாமி கடனை உடனே
தீர்த்து விடுவேன்
இதுல
என்றைக்கு
என்ன விஷயமா
எந்த சாமி கிட்ட
என்ன செய்வதாய்
வேண்டிக்கிட்டேனோ
அத்தனையும் இருக்கும்
என்று சொல்லி சிரித்தார்
தன் மொட்டைத்தலையை
தடவியபடி.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக