கல்யாண ...‌..........

 கல்யாண ...‌..........

*******************.

இளமைக்கால நண்பனுக்கு 

இறுதி மரியாதை செலுத்த

இரு வயதான நண்பர்களின்

எலும்புக் கூடுகளுக்கு

தோல் போர்த்தி பட்டி பார்த்து 

துணி சுற்றி தூக்கி வந்து

திண்ணையில் அருகருகே

 உட்கார வைத்திருந்தனர். 


அதிலொருவர் குறும்பு மிளிர

புன்சிரிப்புடன் இடுங்கிய

கண்களால் நண்பனை பார்த்து 

ஒட்டிப்போன கன்னம் குழிய

உலர்ந்த உதடுகள் உதற

எட்டி எட்டி பார்க்கும் நாக்கை

அடக்கி ஏதோ சொல்ல

இருவரும் எலும்புகள் குலுங்க

சிரித்தனர்

நீ இன்னும் திருந்தவே இல்லை

என்பது போல் அடுத்தவர் எதோ

சொல்ல சிரிப்பு தொடர்ந்தது


என்ன பேசிக்கொண்டனர் 

எதற்கு சிரிக்கிறார்கள் 

என்பது தெரியாமலே 

அவர்கள் சிரிப்பு அனைவரது 

முகத்திலும் தொற்றிக்கொள்ள

உள்ளே கிடத்தப்பட்டிருந்த

அவர்களது நண்பர் முகத்திலும்

அந்த சிரிப்பு தெரிந்தது.


(விஞ்ஞானி)







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்