அனுமதி

 அனுமதி.

**************

அந்நியர்களுக்கு

வீதி வரை

வர்த்தகர்களுக்கு

வாசல் வரை....

வேலையாட்களுக்கு 

கொல்லை வரை.....

நண்பர்களுக்கு 

திண்ணை வரை....‌‌.

சொந்தங்களுக்கு 

கூடம் வரை.......

பந்தங்களுக்கு 

அடுப்படி வரை........

என்று 


பிடிவாதமாக

தனிக்குடித்தனம்

போகும் மருமகளுக்கு

மாமியார் 

தன் அறிவுரைகளை

சொல்ல


உங்களுக்கு

என்று கேலியாக

கேட்டாள் மருமகள்


என் மகனின் இதயம் வரை

என்று சொன்ன மாமியார்

இருகரம் கூப்பி

நீ தடுக்காத வரை

என்றாள்


(விஞ்ஞானி)




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்