ஸ்கேன் ரிப்போர்ட்

 ஸ்கேன் ரிப்போர்ட் 

*********************


அடைப்பு எதுவும் இல்லை

என்றாலும் அம்மாவிற்கு

இதயம் பலஹீனமாக

இருக்கின்றது. காரணம்

என்னவென்று பார்க்கனும்

என்றார் மருத்துவர்


அம்மா அவள் தன் இதயத்தின் 

நான்கு அறைகளில் ஒன்றை

 சொந்த வீடு இல்லாத 

மகனுக்கென நிரந்தரமாய்

ஒதுக்கி வைத்திருப்பதால்

அதன் இயக்கத்தில் ஏற்பட்ட 

சுணக்கமே காரணம் என்று

ஸ்கேன் ரிப்போர்ட் சொல்லாது


சொன்னால்  

மருத்துவம் கைக்கொட்டி

சிரிக்கும் ஆனால்

மகனுக்கு வலிக்கும்


(விஞ்ஞானி)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்