ரியல் எஸ்டேட்.
ரியல் எஸ்டேட்.
******************
நிலவில்லாத இரவு
கோவிலின் இருப்பை காட்ட
உச்சியில் சோர்வுடன் எரியும்
மின் விளக்கு
தெருவில் எப்போதாவது கண்
சிமிட்டும் குழல் விளக்கு
ஒரு சில வீடுகளில் ஜன்னலை
விட்டு வெளியே எட்டி பார்க்க
மறுக்கும் மங்கிய ஒளி
அந்த இருளிரவில் நண்பர்கள்
இருவரும் விரல்களிடை
சிகரெட் கங்குகள புகைய
ஒதுக்குபுறமாய் நின்று
பேசிக்கொண்டு இருந்தனர்
ஊருக்கு புதிதாய்
வந்தவன் நண்பனிடம்
ஊரை விட்டு வெகு தூரத்தில்
தெரிந்த வெளிச்சம் ஒன்றை
காட்டி அது என்னவென கேட்க
மயானம் என்றான் நண்பன்
ஊரே இருளில் இருக்க
மயானத்துக்கு மட்டும் ஒளி
எதற்கு என்று கேட்டதற்கு
திருட்டு பயந்தான் காரணம்
என்றான் நண்பன்
திருட்டு போக மயானத்தில்
என்ன இருக்கு என்ற
கேள்விக்கு
மயானம்தான்
என்றான்
நண்பன்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக