ஈர்ப்பியல்

 ஈர்ப்பியல்.

***********

அடுத்த வருடமும் 

அதே வகுப்பு


அவன் தோல்வியால்

துவள்வது

அப்பாவின் இறுக்கம்

அம்மாவின் புலம்பல்

அக்காவின் அறிவுரை 

தம்பியின் கிண்டல் 

இவற்றுக்கு பயந்து

அல்ல 


இவனது ஆள் மேல்

வகுப்பு போக

இவன் கீழ் வகுப்பில்

இருப்பதால்


ஓடி விடலாமா

இறந்து விடலாமா

பள்ளி மாறி போகலாமா

படிப்பை விட்டு விடலாமா

என்ற எண்ணங்கள் 

வீட்டுக்குள் முடக்கி போட

விடுமுறையும் ஓடி விட்டது

பள்ளியும் திறத்து விட்டது


குனிந்தபடி வகுப்புக்குள்

நுழைகையில்

மின்னல் வெட்டியது


இரண்டு மாத கவலை

கழிவிரக்கம் பாரம் யாவும்

பொல பொலவென 

கொட்டிப்போனது.


பெண்கள் வரிசையில்

இரண்டாவதாக அமர்ந்து

இருந்தாள் இவனது ஆள்

தலையை கவிழ்ந்தபடி.


(விஞ்ஞானி)




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்