புரியுதுங்க
புரியுதுங்க.
*************
ஈர விழி காயாது
ஈரிதழும் ஓயாது
துயர் சொல்லும்
மனைவியிடம்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
எனும் கவியரசர்
வரிகளை பாடி
புரியுதா என்றான்
புரியுது என்றவள்
அடுத்த வீட்டுக்காரனுக்கு
இரண்டு கண்களும் போச்சு
நமக்கு ஒன்னுதானே போச்சுன்னு
சந்தோஷ படற மாதிரி
என்றாள்
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக