நண்பேன்டா

 

நண்பேன்டா.

**************

நாகத்துடன் நட்பு வேண்டாம் 

ஒருநாள் இல்லை ஒருநாள் 

உன்னைக் கொன்று விடும்

என்றனர்

அவன் கேட்கவில்லை 

நாகத்துடன் நட்பு தொடர

அது அவன் அன்புக்கு 

அடிமையாகதான் இருந்தது 


ஒரு நாள் அது 

அவன் சொல்லுக்கு

அடங்காது கோபமாய்

கொத்த வருவது போல

சீறியது.


பயத்தில் அடித்து கொன்ற

பின்னரும் அவனுக்கு

தெரியவில்லை

அது அவன் பின்னால்

ஒளிந்திருந்த பூனையை

பார்த்து சீறிய உண்மை


மனிதனை மட்டும் நம்பாதே

ஒருநாள் இல்லை ஒருநாள் 

கொன்று விடுவான் உன்னை

என்று சொன்னதை கேளாது

விட்டதே உயிரை என்று 

வருந்தின பாம்புகள்.


(விஞ்ஞானி)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்