புது கவிஞன்
புது கவிஞன்.
**************
அறைக்குள் ஒரு கவிதை சொன்னான்
அவளது ஆச்சரியம் அவனுக்கு ஆனந்தமளித்தது
கூடத்தில் ஒரு கவிதை சொன்னான்
குடும்பத்தார் குதூகலம் அவனுக்கு உற்சாக மூட்டியது
திண்ணையில் ஒரு கவிதை சொன்னான்
தெருவில் தெரிந்தவர் புன்னகை அவனுக்கு ஊக்கம் கொடுத்தது
ஊர் மேடையேறி ஒரு கவிதை சொன்னான்
எதிரில் நிலவிய அமைதி அவனுக்கு திகைப்பை
தந்தது
ஒருவர் கூடவா கவனிக்க வில்லை என்று
ஒருவன் மேடையேறி இவனை நோக்கி ஓடி வர
இவன் ஆவலுடன் நின்றான்.
வந்தவன் ஐயா டீ குடுக்கவா
பத்து ருவாதான் சூடா இருக்கு என்று
டீ கேனை காண்பித்தவன்
இவன் முக வாட்டத்தை பார்த்ததும்
அருகில் வந்து மெதுவாக இவன் காதருகே
அடுத்த தடவை வரும்போது உனக்கு தெரிஞ்சவங்க பத்து பேர கூட கூட்டிகிட்டு வா
அப்பதான் கெத்தா இருக்கும் என்றான்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக