இன்மை
இன்மை.
***********
ஓரிரு கவளம் உள்ளே
செல்லும் போதே முகம் சுளித்து
சுவையில்லை என்றெழுந்து
ஓடும் மகளை அழைத்தழைத்து
ஓய்ந்தனள் தாய்
மதியம் விடு திரும்பிய பெண்
தட்டுப் போட்டு மூடப்பட்டு
தான் வைத்தது வைத்தபடியே
இருப்பதை பார்த்து
திகைத்தனள்
தாயருகில் தட்டுடன் அமர்ந்து
மறுதலிக்கும் தாய்க்கு ஒருவாய்
தனக்கு ஒரு வாய் என்று
உலர்ந்து போன உணவை
பகிர்ந்து உண்டனள்
தாய் கண்ணில் துளிர்த்த நீர்
தட்டில் விழுந்து சொன்னது
மகளே உனை நான் அறிவேன்
என்று.
மகள் கண்ணில் இருந்து எட்டி
பார்த்த நீர்த்துளி
அம்மா நான் உன்னிடம் தோற்று
போய்விட்டேன்
என்று சொல்லி விட்டு
இமையோரம் ததும்பி நின்றது.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக