கொடுக்கு அருவா.

 கொடுக்கு அருவா.

********************


கனரக வாகனம் பூமியதிர

சாலையில் சென்றது

பொல பொலவென தூசி

கூரையிலிருந்து விழுந்தது


தூசியோடு விழுந்த சிறிய

தேள் ஒன்று

தன்னை மனிதன் நசுக்க

காரணமாக விளங்கும்

விஷக்கொடுக்கை

கொட்டிட தயாராக

தூக்கியபடி மறைவிடம் 

தேடி ஓடியது.


அவள் அதை பார்த்தாள்

கூரையில் சொருகியிருந்த

வீச்சரிவாளை பார்த்தாள்

கதவுக்கு பின் இருந்த

உருட்டு கட்டைகளை

பார்த்தாள்


தன் முரட்டு கணவனை

பார்த்தாள்

அடிப்படும் தேளை பார்க்காது

கண்ணை மூடிக்கொண்டாள்.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்