நகைமுகன்
நகைமுகன்.
************
அவன் காலில் செருப்பிருக்கும்
இருந்தாலும்
வழியில் கிடக்கும் முள்ளை
ஓரமாய் எடுத்து போடுவான்
செருப்பில்லாதவனுக்காக
அவன் வயிற்றில் பசியிருக்கும்
இருந்தாலும்
வாங்கிய பிஸ்கட் துண்டை
தெருநாய்க்கு போட்டிடுவான்
அதற்கு பசிக்கும் என்பதனால்
அவனுக்கு இடம் கிடைக்கும்
இருந்தாலும்
நின்றபடி பயணம் செய்வான்
தள்ளாதவர்க்கு இருக்கையை
கூப்பிட்டு கொடுத்து விட்டு
அவனுக்கு செலவு இருக்கும்
இருந்தாலும்
தேவையை தள்ளி வைப்பான்
இல்லாதவரின் கண்ணீருக்கு
இருப்பதை தந்து விட்டு
அவனுக்கு சிரித்திட தோன்றும்
இருந்தாலும்
அதிகம் சிரிக்க மாட்டான்
மற்றவர் படும் துயரங்களை
மனதில் சுமந்துக்கொண்டு
இருந்தாலும் அவனுக்கு
ஊரார் வைத்த பெயர்
இளிச்சவாயன்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக