புறம்போக்கு
புறம்போக்கு
************
பொழப்பு தேடி இந்த ஊருக்கு
வந்த நாள் முதலாய்
அந்த கடை வாசல் படிதான்
அவனுக்கும் அந்த தெருவின்
நாய்க்கும் படுக்கும் இடம்
அதிகாலை கடைக்காரர்
வந்து எத்தும் வரை.
ஒரு கும்பிடு போட்டுவிட்டு
பொழப்ப பார்க்க இவன் ஓட
இன்னொரு பக்கம் அந்த
நாய் ஓடும்.
ஒருநாள் கடையில் பாதியை
பொக்லைன் இயந்திரம்
இடித்து தள்ளியது
ஆக்கிரமிப்பு என்று
அத்துமீறி கடை கட்டியவன்
ஆற்றாது அடிவயிற்றில்
அடித்துக்கொண்டு அழுதான்
அழ உரிமை இல்லாதவன்
ஓரமாய் ஒதுங்கி நின்று
பார்த்துக் கொண்டிருந்தான்
ஆறுதல் சொல்வது போல்
அந்த நாய் இவனை
உரசிக்கொண்டு
மிக மிக மெதுவாக வாலை
அசைத்தப்படி நின்றது.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக