ஒரு அம்மாவின் கதை.
ஒரு அம்மாவின் கதை.
**********************
அம்மாவை அவளுக்கு ரொம்ப
பிடிக்கும்
அம்மாவை போலவே இருக்க
பிடிக்கும்
அம்மாக்கள் ஒன்றென
நினைத்து போன இடத்தில்
அம்மாக்கள் எல்லோருக்கும்
அம்மாக்கள் இல்லை
என்பதை தெரிந்து
கொண்டாள்
அம்மா கனவுடன்
அம்மா ஆனவளுக்கு
தங்களுக்கு அம்மாவாக
இருக்க
பேரக்குழந்தைகளின்
அம்மாக்கள் இடம்
தரவில்லை
ஆனாலும் இப்போதும்
அம்மாவாகத்தான்
இருக்கின்றாள்
ஆசைப்பட்ட படி
முதியோர் இல்லத்தில்.
தன் வயதொத்த
குழந்தைகளுக்கு.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக