அம்மையப்பன்

 அம்மையப்பன்.

******************

மனைவியிடம் தனக்கான

முன்னுரிமையை 

மகன் பிறந்ததும் விட்டு

கொடுத்தான்


தன் சைக்கிளை விற்று

புது சைக்கிள்

மகன் கேட்டதும் வாஙகி

தந்தான்


தன் மனைவியிடம் இருந்த

சாவிக்கொத்தை

மகன் மனைவியிடம் உவந்து

அளித்தான்


விவாதம் என்று வந்ததும்

தன் வீட்டை

மகனின் பெயருக்கு எழுதி

வைத்தான்


செலவை தவிர்க்க நோயுடன்

வாழ்ந்து

மகனுக்கு செலவு வைக்காது

இறந்தான் 


செய்யா சிகிச்சை செய்ததாய்

புனைந்து

மகன் காப்பீட்டு தொகையை

பெற்றதும்


இன்னமும் தன்னால் உதவ

முடிகிறதே என்று

புகைப்படமாக இருந்து

மகிழ்ந்தான்.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்