கொஞ்சம் குறைவு
கொஞ்சம் குறைவு.
*******"********
பிடிபட்ட மீன் கை நழுவி
ஆற்றில் துள்ளி விழ
பதறிய மீனவனிடம்
வாழ வேண்டும் என்பது
அதன் விதி வருந்தாதே
என்றார் ஓர் முனிவர்
விதியென்றால் என்ன
என்ற மீனவனிடம்
பிறப்பு முதல் இறப்பு வரை
ஏற்கனவே இறைவனால்
நிர்ணயிக்கப்பட்ட
வாழ்க்கை பயணமே
விதியாகும் என்றார்
முனிவர் அவரது விதியை
அறிவாரா என்ற
மீனவன் கேள்விக்கு
அறியேன்
ஆனால் இறைவனுக்கு
அறிவு கொஞ்சம் குறைவு
என்பதை மட்டும் அறிவேன்
என்றார்
ஏன் இப்படி சொல்கிறீர்கள்
என்ற கேள்விக்கு
நான் சொல்லவில்லை
நான் படும் பாடு அப்படி
சொல்ல வைக்குது
என்றார் முனிவர்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக