பலசாலி
பலசாலி.
*********
தாத்தாவின் சட்டை பையை
பேரன் ஆய்வு செய்ய
தலை முடியை கலைத்து
பேத்தி அழகு செய்ய
தாத்தாவை தொந்தரவு
செய்யாதீர்கள் என்று
சத்தமாய் வந்த குரல்
தாத்தா கையமர்த்த
அடங்கி போனது
பேரன் கேட்டான்
தாத்தா நீ பெரிய பலசாலியா
அதான் எல்லாரும் உன்ன
பாத்து பயப்படராங்களா
என்று.
ஆமாம்
பலசாலி பண பலசாலி
என்று மெதுவாக சொல்லி
தாத்தா சிரித்தார்
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக