ஓவியம்
ஓவியம்.
***********
கிடைத்த இடைவெளிகள்
வழியே வழிந்துக்கொண்டு
இருந்தது நிலவின்
வெளிச்சம்
சத்தம் அவனை
எழுப்பிவிட்டது
ஜன்னல் வழியே ஒரு
நீளமான குச்சி சுவரில்
மாட்டி இருந்த வேட்டியை
எடுத்துக்கொண்டு
மீண்டுக் கொண்ட
இருந்தது
அவன் எழுந்து சுவரில்
தொங்கிய ஒரு சட்டையை
எடுத்து அந்த வேட்டியின்
மீது போட்டான்.
குச்சி நகர்வது நின்று
விட்டது
எட்டி பார்த்தான்
தொலைவில் ஒருவன்
ஓடிக் கொண்டு
இருந்தான்.
சும்மா இருந்திருந்தா
அவனுக்கு வேட்டியாவது
கிடைத்திருக்கும் என்றாள்
பார்த்துக்கொண்டு இருந்த
அவன் மனைவி
ஆமாம் என்பது போல்
தலை அசைத்தான்
துணிகளை ஆணியில்
திரும்ப மாட்டினான்.
கதவை திறந்து
வீட்டுக்கு வெளியே வந்து
குச்சியை உருவி ஓரமாய்
போட்டுவிட்டு வீட்டுக்குள்
திரும்பி போய் கதவை
சாத்திக்கொண்டான்
கிடைத்த இடைவெளிகள்
வழியே வழிந்துக்கொண்டு
இருந்த நிலவின் ஒளியில்
அந்த குடிசை ஒரு ஓவியம்
போல் காட்சியளித்தது.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக