புகைப்படலம்
புகைப்படலம்
*************
அனுபவித்து புகைத்தார்
பற்கள் கொட்டிய வாயில்
பாக்கைக் கொட்டி அதக்கி
துப்பினார்
பொக்கை வாயில் நீரூற்றி
கொப்பளித்தார்
உள்ளங்கையில் ஊதி
முகர்ந்து பார்த்துவிட்டு
திருப்தியுடன் கிளம்பினார்
இந்த வயசிலும்
வீட்டை பார்த்து பயமா
என்றேன் சிரித்தபடி.
பயமில்ல தம்பி தெரிஞ்சா
அவ வருத்தப்படுவா
அதான் ...
என்று சொல்லிவிட்டு
அவர் போய் விட்டார்.
பாவம் சார்
அந்தம்மா காலமாகி
வருஷம் ஒன்றாக போகுது
என்றார் கடைக்காரர் .
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக