ரயில் பயணம்.

 

ரயில் பயணம்.

*****************


பேசியே ரயில் பயணங்களில் 

சக பயணிகளை நண்பர்களாக

ஆக்கி கொள்வதென் பழக்கம்


அதில் பலகார பகிர்வு முதல்

படுக்கை வரிசைகளை மாற்றி

கொள்வது வரை பல பயன்கள்

உண்டு


இன்றைய பயணத்தில் 

சன்னலோரம் அமர்ந்திருந்த

கீழ் வரிசை படுக்கைக்கு உரிய

முதிர்ந்த இளைஞரிடம்


புன்னகையடன் எது வரை

பயணம் என்றேன்


தெரியவில்லை என்றார்


திகைப்புடன் இடம் தெரியாமல்

எப்படி டிக்கெட் எடுத்தீர்கள்

என்றேன்


நான் எடுக்கவில்லை 

இரண்டு பேர் டிக்கெட் எடுத்து

ஏற்றி விட்டார்கள் என்றார்


ஏற்றி விட்டவர்கள் எங்கே

இறங்கவேண்டும் என்று

சொல்லவில்லையா என்றேன் 


இறங்க வேண்டிய இடத்தில்

நான்கு பேர்கள் வந்து 

அழைத்து போவார்களாம்

என்றார்


அன்றைய என் இரவு பயணம் 

மேல் வரிசை படுக்கையில்

தூக்கமின்றி.


(விஞ்ஞானி)

 








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்