வானவில்

 வானவில்.

***************


விண்ணில் தோன்றிய

வானவில்லையே பார்த்து

கொண்டிருந்தவனிடம்

அளவளாவிக்கொண்டிருந்த

நண்பர்களில் ஒருவன்

கேட்டான்


என்ன கவிஞரே சிறகை

விரிக்கும் வண்ணக்கிளி

கண் முன் பறக்கிறதா என்று 


இன்னொருவன்

வண்ண தாவணிகள் காற்றில்

அலைய கன்னியர்கள் போடும்

ஆலவட்டம் போல தெரிகிறதா

என்றான்


இல்லை போன மாதம் 

என் மகன் கேட்ட கலர் பாக்ஸ்

நினைவுக்கு வருகிறது

மறந்தே விட்டேன்

உடனே வாங்கித் தரனும்

என்று அந்த கவிஞன் 

எழுந்து விரைந்தான்


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்