செபம்
செபம்.
*********
நண்பரை நல்லடக்கம்
செய்த இடத்தில் சில
செங்கற்களை அடுக்கி
அவற்றுக்கு நடுவே
மரக்கடையில் தூக்கிப்
போடப்பட்ட கட்டைகளை
கொண்டு செய்த சிலுவை
ஒன்றை நட்டு விட்டு
கண்மூடி செபித்து விட்டு
அந்த வறிய பெரியவர்
சென்றார்.
ஓரிரு மாதங்கள் கழித்து
அந்த பக்கம் வந்தபோது
புதைத்த இடத்தில் நட்ட
சிலுவை சாய்ந்து இருந்தது
செங்கற்களை காணவில்லை
செங்கல் திருடர்களை
சபித்தபடி வெளியே
செல்லும் போது அங்கே
தெருவோரத்தில் தங்கி
இருந்த ஒரு குடும்பம்
அவர் கண்ணில் பட்டது.
ஒரு பக்கம்
இரண்டு குழந்தைகள்
விளையாடிக் கொண்டிருக்க
சுவரோரம்
செங்கல் அடுப்பு புகைய
ஒரு பெண் சமையல் செய்து
கொண்டிருந்தாள்
துணுக்குற்ற பெரியவர்
சபித்ததற்காக வருந்தி
அவர்களுக்காக செபித்தபடி
செல்லலானார்.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக