வாழ்க்கைப்பாதை

  வாழ்க்கைப் பாதை

********************


காட்டுப் பாதை

மிருக உறுமல்கள்

அரவ சீறல்கள்

கண்ணயராது

கடந்து விட்டேன்


மலைப் பாதை

வழுக்கும் பாறை

சறுக்கும் சரளை 

கவனம் சிதறாது

ஏறி விட்டேன்


தண்ணீர் பாதை

புரளும் வெள்ளம்

புதையும் மணல்

எச்சரிக்கையோடு

தப்பி விட்டேன்


நந்தவன பாதை

கவரும் மலர்கள்

கமழும் வாசம்

கிறக்கத்தோடு

இடறி விழுந்து 

விட்டேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்