வண்ணக் குமிழிகள்.

 

வண்ணக் குமிழிகள்.

**********************

குறுங்குழலை அவன் 

ஊத ஊத

சோப்பு நுரை குமிழிகள் 

முனை வழியே சீறி

சிறிய பெரிய வண்ண

பந்துகளாக வர்ணஜாலம் 

காட்டி 

காற்றில் பறந்து அலைந்து

உடைந்து

காணாமல் போய் கொண்டு

இருந்தன


அதை வாங்கித்தர சொன்ன

குழந்தையிடம் 


அதில் ஒன்றுமே இல்லை

வெறும் சோப்பு நுரை

என்றார் அப்பா


அதற்கு அந்த வியாபாரி


என்னங்கய்யா ஒன்னும்

இல்ல

நம்ம பொறப்பு மட்டும் தான்

ஒரே மாதிரி

ஆனா பெரிய குமிழிகளா

சிலர்

சின்ன சின்ன குமிழிகளா 

பலர்

திரும்பவும் கடைசியில 

எல்லா வர்ணஜாலமும் 

முடிவது காத்தோட 


இப்படி நம்ம வாழ்க்கைய 

படம் புடிச்சி காட்டற 

விளையாட்டய்யா இது

என்றான்


(விஞ்ஞானி)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்