சாரல்
சாரல்.
****************
சாரல் வழி மறித்தது
ஒதுங்க இடம் தேடினேன்
நின்று என் கேள்விக்கு பதில்
சொல்லிவிட்டு போ என்றது
பால்ய நண்பன் சொல்லை
தட்ட முடியவில்லை
நின்று விட்டேன்
என்னுடன் துள்ளி விளையாடிய
நாட்களை மறந்து விட்டாயா
என்று கேட்டது
அறியா பருவமது என்றேன்
காதலியோடு கை கோர்த்து
நனைந்தபடி என்னை ரசித்து
நடை போட்டது நினைவில்
இல்லையா என்றது
அது வாலிபமுறுக்கு என்றேன்
என்னதான் ஆயிற்றென்று
குடைக்குள் மறைந்தாய்
கூரைகளை தேடினாய்
ஜன்னல்களை மூடினாய்
என்று கேட்டது
புள்ளக்குட்டிக்காரன்
ஆனதால் என்றேன்
இப்ப வயதுதான்
ஆகி விட்டதே
இன்னமும் ஏன் என்னை
தவிர்கின்றாய்
என்றது
நச் நச் நச்சென்று விடாது
தும்ம தொடங்கினேன்
சரி சரி புரிகிறது
என்று சொல்லி
வழியை விட்டது சாரல்
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக